50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் செய்யாதது பாஜக செய்துள்ளது – அர்ஜுன் சம்பத்
- நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
- குடியுரிமை சட்டம் என்பது 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் செய்யாதது பாஜக செய்துள்ளது என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், குடியுரிமை சட்டம் என்பது 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் செய்யாதது பாஜக செய்துள்ளது.வேண்டும் என்றே பாகிஸ்தான் தூண்டுதல் பேரில் சில முஸ்லிம் அமைப்புகள் செயல்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மாணவர்களின் படிப்பை கெடுக்கும் விதமாக மாணவர்களை தூண்டி விட்டு போராட்டம் செய்கின்றனர்.
திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். திமுக நடத்துகின்ற ஓட்டு வங்கி அரசியலுக்கு இஸ்லாமியர்களை பலியாக்குகின்றனர். திமுக கொடியை பயண்படுத்தி SDPI,கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கலவரத்தை ஏற்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.