ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மூலம் பாஜக தனது முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது – கே.எஸ்.அழகிரி
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மூலம் பாஜக தனது முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்,இந்தியாவை ஒரே நாடாக கற்பனை செய்வதே தவறானது .ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மூலம் பாஜக தனது முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது.மேலும் தமிழக எம்பிக்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டனர் என தமிழிசை கூறியதற்கு கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.அதில், கையெழுத்து என்பது மொழி சார்ந்தது அல்ல. அது குறியீடு சார்ந்தது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.