பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது! – ஜோதிமணி எம்.பி

Default Image

பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வந்தநிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாத காலத்திற்கு கட்சி பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆர் எஸ் எஸ் /பாஜக சித்தாந்தம் அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை வெட்கமற்று ஆதரிப்பது,பாதுகாப்பது. பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் பாதுகாத்ததாக வரலாறு கிடையாது.

பாஜகவின் ராகவன் ,பாஜகவைச் சார்ந்த பெண்ணிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டதை விசாரிக்க பாஜக ஒரு கமிட்டி அமைத்தது. அது என்ன ஆனது? அந்த அறுவெறுக்கத்தக்க செயலை வெளிக்கொண்டு வந்தவர்கள்தான் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர். ராகவன் அல்ல.

இன்றும் பாஜகவைச் சேர்ந்த சகோதரி பாஜகவின் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். காசு கொடுத்து சமூக ஊடகங்களில் லைக்குகள் வாங்குவதை அம்பலப்படுத்தியுள்ளார்.இதனால் அவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது! என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்