பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை விமர்சிப்பதா என அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்.
பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிட கட்சிகள் உள்ளன என்று அதிமுகவை மறைமுகமாக சாடினார். பாஜகவில் இருந்து இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிட கட்சிகள் இழுக்கின்றன.
திராவிட கட்சிகள்:
திராவிட கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது. பாஜகவில் இருந்து திராவிட கட்சிகளுக்கு செல்கின்றனர், ஆனால் பாஜக வளர்ந்து வருகிறது. பாஜகவினரை இணைத்து கொண்டு தங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார். பாஜகவில் இருந்து ஆட்களை கொண்டு சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகியுள்ளது என்றும் பாஜகவினரை திட்டமிட்டே (அதிமுக) இழுப்பதாகவும் அண்ணாமலை குற்றசாட்டியிருந்தார்.
எடப்பாடிக்கு எச்சரிக்கை:
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி போல நானும் ஒரு தலைவர், நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். நான் தலைவர் மாதிரிதான் முடிவெடுப்பேன், மேலாளர் மாதிரி முடிவு எடுக்கமாட்டேன் எனவும் கூறியிருந்தார். மேலும், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுப்பது போல் பேசியிருந்தார்.
அதிமுக கண்டனம்:
இந்த நிலையில், பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை விமர்சிப்பதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, அண்ணாமலைக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் பதில் அளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
NOTA-வை விட குறைவு:
அவரது பதிவில், NOTA-வை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி MLAக்களை வென்றது என்பதே இதற்கான பதில். அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகைப்புக்குரியது என தெரிவித்துள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…