பாஜக கொடிக்கு தீவைப்பு.! தென்காசி மாவட்டத்தில் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!
தென்காசி மாவட்டம் செல்லப்பிள்ளையர்குள கிராமத்தில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தில் இருந்த கோடி தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கிராமத்தில் பாஜக கொடிக்கம்பத்தில் இருந்து கொடியை மர்மநபர்கள் எரித்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே செல்லப்பிள்ளையார்குளம் எனும் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சி கொடிக்கம்பங்கள் இருக்கின்றன. அதே போல, பாஜக கொடிக்கம்பமும் இருக்கிறது.
இந்த கொடிக்கம்பத்தில் இருந்து யாரோ சில மர்ம நபர்கள் கொடியை கீழிறக்கி அதனை தீயிட்டு கொளுத்திவிட்டனர். சம்பவம் அறிந்து வந்த வந்த போலீசார், இந்த செயலை செய்த மர்ம நபர்கள் யார் தேடி வருகின்றனர்.
இதே போல, சில மாதங்களுக்கு முன்னர் பாஜக கொடி கம்பம் அங்குள்ள 2 குடிபோதை ஆசாமிகளால் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.