திமுக எம்.எல்.ஏ சரவணன் கடந்த 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் எம்எல்ஏ சரவணன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில், திமுக எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இன்று பாஜகவில் இணைந்த மருத்துவர் சரவணனுக்கு மதுரையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து, பாஜகவில் இணைந்த மருத்துவர் சரவணனுக்கு எதிராக பாஜகவினர் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட சரவணனுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு உடனே வாய்ப்பு வழங்குவதை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…