தமிழக ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் மனு!
மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை பாஜக நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர். துணைத்தலைவர் விபி துரைசாமி தலைமையில் பாஜக பட்டியல் அணி மாநில நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
இத்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விபி துரைசாமி, பட்டியல் சமூகத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். வாக்கு வங்கியை தக்க வைக்கவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். மேலும், பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.10,446 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.