போதைப்பொருள் கடத்தல்..பாஜக நிர்வாகி அதிரடி நீக்கம்..!

திருச்சி பகுதியில் ஒரு காரில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் காமராஜ் தலைமையிலான போலீஸாசார் நடத்திய வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அடைக்கலராஜ், திருச்சி நொச்சியம் மாந்திரி மங்களத்தை சேர்ந்த ஆதடையான் ஆகியோர் வந்த காரில் அபின் போதைப்பொருள் இருந்தது தொிய வந்தது. விசாரணையில் பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத்தலைவர் மற்றும் ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினராக லுவாங்கோ பி. அடைக்கலராஜ் என்பது தெரிந்தது.
போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025