சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது…!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு வயது 60. இவர் தெற்கு ஒன்றிய பாஜக செயலாளராக உள்ளார். இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 4 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்துள்ளார். மேலும் அதனை காண்பித்து அதேபோல தன்னிடம் பாலியல் சில்மிஷம் செய்ய வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, இதுகுறித்து ஒரு சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை கைது செய்த போலீசார், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டி விதல்டு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025