பாஜகவின் முக்கிய நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளது காவல்துறை. தமிழ்நாடு பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வருபவர் தான் அமர் பிரசாத் ரெட்டி. இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது. இவர், தமிழக அரசும் மீதும், திமுகவுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த சூழலில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஈசிஆர் சாலை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு சுமார் 50 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் நடப்பட்டு பாஜகவின் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கொடிக்கம்பம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பாஜகவினர் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இதனால், பாஜகவின் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்தது போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பாஜகவினர் குவிந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறை கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை வரவழைத்தது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்.! ஹமாஸின் தளபதி உயிரிழப்பு.!
ஆத்திரமடைந்த பாஜகவினர் ஜேசிபி மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்தனர். இதனால், காவல்துறைக்கும், பாஜக தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் கொடிக்கம்பம் அகற்றப்பட்டு, மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனிடையே, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததன் காரணமாக பாஜக தொண்டர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இது விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இதையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழக பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி, மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாமரை சின்னத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
செஸ் ஒலிம்பியாட் தொடர்பான அரசு விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய விவகாரத்தில் அப்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமர் பிரசாத் ரெட்டி மீது கோட்டூர்புரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பரம் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டது.
இதில், பேருந்து நிறுத்தங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர போஸ்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டுமே இருப்பதாகவும், பிரதமர் மோடியின் படம் இல்லை எனவும் அமர் பிரசாத் ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக விளம்பர போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை அமர் பிரசாத் ரெட்டி ஒட்டினார். அப்போது, அவர் மீது புகார் எழுந்த நிலையில், வழக்கும் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…