பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்த கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின் வந்த காவல்துறை கொடிக்கம்பத்தை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். அப்போது, பாஜகவினர் ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தி, காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் குண்டு வெடிப்பு – நசீரை நவ.17 வரை சிறையில் அடைக்க உத்தரவு!
இதனிடையே, கடந்த ஆண்டு தமிழக அரசின் ஏற்படின் கீழ் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா விளம்பரத்தில் இடம்பெற்ற மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றிவிட்டு பிரதமர் மோடி படத்தை ஒட்டியது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டயை யை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். இதுபோன்று, போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்தது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம். மேலும், தென்காசி ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திலும் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தென்காசியில் நடைபெற்ற போது, போலீசாருடன் வாக்குவாதம் செய்த அமர் பிரசாத் ரெட்டி மீது அங்கு வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றம். தென்காசியில் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தின் போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் வழங்கியது நீதிமன்றம். இந்த வழக்கில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் அழைத்து சென்ற நிலையில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…