தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிட்டது என்று மேற்குவங்க வன்முறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்.முருகன் பேச்சு.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன்பின் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், மேற்குவங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக பயங்கரவாத செயலில் மம்தா அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் குற்றசாட்டினார். இதன்பின் பேசிய எல் முருகன், தமிழகத்தைப் பொறுத்தவரையில், பாஜகவை நுழையவிடக்கூடாது என்று பலரும் எண்ணினர். ஆனால் தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிட்டது. சட்டப்பேரவைக்கு பாஜக உறுப்பினர்கள் சென்றுவிட்டார்கள் குறிப்பிட்டார்.
இந்த ஆர்பாட்டத்தில் ஒழிப்போம் ஒழிப்போம்! மம்தா பானர்ஜியின் வன்முறை கலாச்சாரத்தை ஒழிப்போம் என்று பதாகைகள் ஏந்தியும், கோஷமிட்டும் பாஜக தொண்டர்கள் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதனிடையே, நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 4 இடங்களில் பாஜக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…