உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து,உபி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், உ.பி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், நான்கு மாநிலங்களில் ஆட்சியமைக்கவுள்ள பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘அன்புள்ள பிரதமர், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று மக்களின் இதயங்களை வென்றதற்கு உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு தீர்ப்பு வருகிறது. இது வளர்ச்சிக்கான ஆணையாகும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…