முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை எனவும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை. – பாஜக முழு அடைப்புக்கு தடை கேட்ட வழக்கில் அண்ணாமலை தரப்பு விளக்கம்.
கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வு தொடர்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என பாஜக செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்து இருந்தார்.
இதற்கு தடை கேட்டு , சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.ஆர்.வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாஜகவின் பந்த்-ஐ சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும், அதற்கு தடை கேட்டும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரியிருந்தார். இதனை ஏற்று இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில், ‘ முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை எனவும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை.’ என விளக்கம் அளித்திருந்தார்.
இதனை அடுத்து இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கபடாமல் விசாரணை நவம்பர் 1ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும், அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடைபெற்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முழு அடைப்புக்கு அழைக்கவில்லை.!
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…