தமிழத்தில் 3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மாநகராட்சி வார்டில் 22, நகராட்சி வார்டில் 56, பேரூராட்சிவார்டில் 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், பாஜக தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில், தமிழத்தில் 3-வது பெரிய கட்சி என்று கூற பாஜகவிற்கு தகுதியில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக நுழைய முடியாது என்று ராகுல்காந்தி கூறியதை மக்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். நீட் தேர்வை ஆதரிக்கின்ற ஒரே கட்சியான பாஜகவுக்கு வாக்காளர்கள் உரிய பாடம் புகட்டி இருக்கிறார்கள். 10 மாவட்டங்களில் வெற்றி கணக்கையே தொடங்காத பாஜக , கைங்கரிங்ஸ் கட்சியோடு ஒப்பிட எந்த உரிமையும் இல்லை.
தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிற பாஜக எதிர்ப்பை எந்த காலத்திலும் அக்கட்சியால் எதிர்கொள்ள முடியாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் முதலமைச்சருக்கு மக்கள் முழு ஆதரவை வழங்குவார்கள் என கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…