பாஜக மாவட்ட தலைவர் சிறையில் அடைப்பு… தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு!
கன்னியாகுமரி பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து நிர்வாகிகள் கோஷம் போடுவதால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டு சலசலப்பு வன்முறையாக வெடித்தது. இதில், கொடி கம்பங்களை கொண்டு தாக்கியும், கற்கள் வீசியும் மோதிக்கொண்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பாஜகவினர் உட்பட 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தொண்டர்களை தாக்கிய விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு வெளியே பாஜக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கோஷம் போடுவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.