அதிமுக பிரச்சனைக்கு பாஜக காரணமில்லை.! – ஓ.பன்னீர்செல்வம் பதில்.!
அதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னேர்செல்வம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பாஜக, பிரதமர் மோடி சந்திப்பு, டிடிவி.தினகரனுடன் கூட்டணி என பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார் ஓபிஎஸ்.
அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தலைமையில் பிரச்சனை இருப்பது போல பிம்பம் உருவாக்கப்படுகிறது என கூறினார். மேலும், அதிமுக பிரச்சனையில் பாஜக தலையிடவிலை. பாஜக இதற்கு காரணமில்லை என பாஜக பற்றிய கேள்விக்கு தனது மறுப்பை தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஒன்றிணைந்தால் டிடிவி.தினகரன் ஒன்றிணைவதாக கூறியது வரவேற்க தக்கது என கூறினார். மேலும் கூறுகையில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அப்போது வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். என ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.