இதுதான் உங்கள் நியாயமா.? ஆதாரம் வெளியிட்டு மத்திய அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்.! 

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜக அரசின் நடவடிக்கையா.? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிள்ளார்.

PM Modi - Tamilnadu CM MK Stalin

சென்னை : மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இன்னும் இணையவில்லை. இதனால் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கல்வி உட்கட்டமைப்புகளுக்காக வழங்கப்படும் நிதி இன்னும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பிஎம் ஸ்ரீ திட்டமானது மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையையை போன்றுள்ளது. மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த கோருகிறது என்றும் அதனால், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வித்துறைக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்காதது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வளைதள பக்கத்தில் ஓர் கண்டன பதிவை குறிப்பிட்டுள்ளார். அதில், “NEP-க்கு (தேசிய கல்விக் கொள்கை) தலைவணங்க மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பாஜக மறுக்கிறது.

அதே நேரத்தில் கல்வியில் குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களுக்கு தாராளமாக நிதியை பாஜக அளிக்கிறது. தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசின் திட்டம் இதுதானா.? இதுபற்றி நம் தேச மக்களே முடிவெடுக்க வேண்டும் என விட்டுவிடுகிறேன்! ” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அதனுடே தனியார் பத்திரிகை நிறுவனத்தில் வெளியான ரிப்போர்ட் ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், தேசிய குடும்பநலத் துறை சர்வே 2019-2020ஐ குறிப்பிட்டு, கல்வியில் அதிக முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு பிஎம் ஸ்ரீ திட்டம் மூலம் உரிய நிதியை வழங்க மறுக்கிறது என பதிவிடப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்