பாஜக தொடர்ந்து குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதும் கவலையளிக்கிறது – ஜோதிமணி எம்.பி
பாஜக தொடர்ந்து குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதும் கவலையளிக்கிறது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
அருப்புக்கோட்டை அருகே மாணவர்களிடம் ஆபாசமாக நடந்த தனியார் செவிலியர் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேசை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஜான் பாஜக சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளிகள்,கல்லூரிகளில் மாணவிகளைப்.பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே,மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொள்வது அதிகரித்து வருகிறது. பல்வேறு பாலியல் குற்றங்களில் பாஜகவினர் ஈடுபடுவதும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜக தொடர்ந்து குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதும் கவலையளிக்கிறது.
பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீண்டநாட்களாக நிலுவையில் உள்ளது. அரசு,அரசியல் கட்சிகள்,நீதிமன்றம், பொதுசமூகம் அனைவரும் பாலியல் குற்றங்கள் குறித்த தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதுவே பெண்களைப் பாதுகாக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.
பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீண்டநாட்களாக நிலுவையில் உள்ளது. அரசு,அரசியல் கட்சிகள்,நீதிமன்றம், பொதுசமூகம் அனைவரும் பாலியல் குற்றங்கள் குறித்த தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதுவே பெண்களைப் பாதுகாக்கும்.
— Jothimani (@jothims) June 11, 2022