பாஜக 20 தொகுதியில் போட்டி.. திமுக-பாஜக 14 தொகுதிகளில் நேரடி மோதல்..!
திமுகவும், பாஜகவும் 14 தொகுதிகளில் நேரடியாக மோதவுள்ளனர்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிப்பங்கீடு முடிந்துவிட்டது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 61 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கும் மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது. கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 61 தொகுதிகளில் 14 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
இதனால், திமுக வேட்பாளர்கள் 173 தொகுதிகளிலும், கூட்டணி வேட்பாளர்கள் 14 தொகுதிகளிளையும் சேர்த்து மொத்தமாக 187 தொகுதிகளில் திமுக உதயசூரியன் சின்னம் களம் காணயுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 173 வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.
இதற்கிடையில், திமுக, பாஜகவை தொடர்ந்து குற்றம் சாட்டியது. அதுபோல, தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் திமுகவை தொடர்ந்து குற்றம் சாட்டினர். இதனால், வருகின்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திமுகவும், பாஜகவும் 14 தொகுதிகளில் நேரடியாக மோதவுள்ளனர்.