தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முடியாது…! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்…!
தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று, திருமாவளவன் அவர்கள் அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
கமலாலயத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 7 ஆண்டுகள் சாதனைகளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சாதனைகளை ஆவணப்படுத்தும் சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எந்த ஒரு தமிழனும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல மோடியின் பாதுகாப்பு கண்டிப்பாக தேவை. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இருக்கும்போதே தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.. தமிழ்நாட்டின் மிக விரைவில் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் பதவியில் அமர தான் போகிறார் அதை பிரதமர் மோடியை பார்க்க தான் போகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும், பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று, அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.