அதிமுக பிரச்னையை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது – வைகோ
தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர் குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என வைகோ குற்றசாட்டு.
மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியை திணிப்பது மூலம் பாதிக்கப்படவர்கள் தமிழர்கள் தான்; தமிழக மீனவர்களை தாக்கும் போது இந்தி தெரியாதா என கூறி தாக்கி உள்ளனர்.
தமிழகத்தில் சமத்துவம், சகோதரத்துவத்தை யார் பாழ்படுத்த நினைத்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அண்ணாமலை பொறுப்பு இல்லாமல் அபாண்டமான குற்றசாட்டுகளை கூறி பொறுப்பில்லாமல் பேசி வருகிறார்.
தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர் குலைக்க பாஜக முயற்சி செய்கிறது; அதிமுக பிரச்னையை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என தெரிவித்துள்ளார்.