தமிழ்நாட்டில் பாஜகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது -அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் சரி, எத்தனை முறை ED, IT-க்களை கொண்டு ரெய்டு நடத்தினாலும் சரி, தமிழ்நாட்டில் பாஜகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இது திராவிட மண்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதர். தமிழகத்தில் இன்னும் கால் நூற்றாண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் நடக்கும். வேறு எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதர்க்கு நினைத்து பார்க்கக்கூடிய அளவுக்கு கூட சூழல் அமையவில்லை. கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கும்; ஆனால் தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக ஆட்சி அமையாது.
கந்த சஷ்டி விழா: தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்த தேதியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் திமுகவுக்கு 20 சதவிகித வாக்கு வாங்கி அதிகரித்து தான் உள்ளது. அண்ணாமலை போன்றோருக்கு அதிகாரத்தில் கையெழுத்திடும் வாய்ப்பை தமிழக மக்கள் ஒருபோதும் வழங்க மாட்டார்கள். காய்த்த மரத்தில் தான் கல்லெறி படும் என்பார்கள். எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு, இந்த ஆட்சி பொறுப்பேற்று இன்றைய தினம் வரை, 1138 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இப்படிப்பட்ட எண்ணிலடங்கா சாதனை எந்த ஆட்சியிலும் செய்யப்படவில்லை. மத ரீதியாக, ஜாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காணவேண்டும் என துடித்தவர்கள், இந்துக்களை ஏற்றுக் கொள்ளும் இயக்கமாக திமுக இருப்பதால், அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை என்பதால், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என அறைகூவல் இடுகிறார்கள் என விமர்சித்துள்ளார்.