தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி தற்போது முன்னிலையில் உள்ளார்.
தமிழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. அதில் , முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பின்னர் காலை 8.30 மணியிலிருந்து தொடங்கப்பட்ட மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில்,திமுக கூட்டணியினர் 153 தொகுதிகளிலும்,அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில், தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
ஆனால்,தற்போது வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி,பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1,166 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…