திருமண கோலத்தில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!
சென்னை மாநகராட்சியில் திருமண கோலத்தில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலின் போது சில வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலை வித்தியாசமான முறையில் தாக்கல் செய்வார்கள்.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 162 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் இன்று காலை அவருக்கு திருமணம் நடந்த நிலையில், திருமண கோலத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.