#BREAKING: பாஜக வேட்பாளரை கண்டித்து பாமகவினர் ஆர்பாட்டம்..!
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை கண்டித்து பாமகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கலிவரதன் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், கலிவரதன் பாமக நிறுவனர் ராமதாஸை ஒருமையில் பேசியதாக கூறி பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக உள்ள நிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலிவரதன் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாமகவில் இருந்து விலகி திமுகவிலும், பின் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.