சைக்கிளில் சென்று வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை!
அரவக்குறிச்சி தொகுதிக்கு சைக்கிளில் சென்று பாஜக வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று அரவக்குறிச்சி தொகுதிக்கு சைக்கிளில் சென்று அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்தார். இவருடன் கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவும் சைக்கிளில் அண்ணாமலையுடன் சேர்ந்து சென்றுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.