சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி_யில் ஆதி தமிழர் பேரவை வெள்ளி விழாவை முன்னிட்டு அருந்ததியர் அரசியல் மாநாடு நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆதி தமிழர் மாநாட்டின் வெள்ளி விழா மலரை வெளியிட்டு மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்து பேசினார்.
அப்போது மு க ஸ்டாலின் பேசுகையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதிகளை அளித்த மோடி அரசு ஐந்து ஆண்டுகளாகியும் அதனை நிறைவேற்றவில்லைபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மோடி அரசு நிதிநிலை அறிக்கை என்று சொல்லமாட்டேன் மோசடி அரசு நிதிநிலை அறிக்கை என்று விமர்சனம் செய்த ஸ்டாலின் தமிழகத்தில் பாரதிய ஜனதா குட்டிக்கரணம் போட்டாலும் காலூன்ற முடியாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .