பாஜக பரப்புரை தொடங்கிவிட்டது – எல் முருகன்
வேல் யாத்திரை மூலம் பாஜகவின் பரப்புரை தொடங்கிவிட்டது என்று தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல் முருகன் கூறுகையில், வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் பாதி மாவட்டங்களை கவர்ந்துவிட்டோம். ரஜினி தேசிய சிந்தனை உள்ளவர். அவர் கட்சி தொடங்கிய பிறகு எனது கருத்தை கூறுகிறேன். கூட்டணி கணக்குகள் குறித்து தேசிய தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க பேசிய எல்.முருகன், நாளை 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.