மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கரூரில் போலீசாரும் பாஜகவினர் வாக்குவாதம்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றத்தை தொடர்ந்து பாஜகவின் மாநிலத் துணை தலைவராக இருந்த அண்ணாமலை தலைவராக செயல்படுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் காரில் செல்லும்போது பாஜகவினர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாடியுள்ளனர். கொண்டாடட்டத்தின்போது காரில் சென்ற ஆட்சியர் பாஜக பட்டாசு வெடிக்க அனுமதி பெற்றுள்ளதா என கேட்டுள்ளார்.
மேலும், பட்டாசு வெடிக்க அனுமதி பெறாவிடில் பாஜகவினரை கைது செய்யும்படி போலீசாருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திமுக வெற்றிபெற்ற போது அனுமதி பெற்றா பட்டாசு வெடித்தனர் என்று கேட்டு காவல்துறைருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
மதுரை: கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு…
சென்னை : ஃபெங்கல் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம்…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…