இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அப்போது, “அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு நன்றி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. போராடக்கூடிய விவசாயிகள் மீது கூட குண்டர் சட்டம் பதிவு செய்யப்படுகிறது. திமுக அரசுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது. எப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் கேட்கின்றனர். மதுரை மாநகரமே குலுங்கும் அளவுக்கு அதிமுக மாநாடு நடைபெற்றது. மதுரையை அதிர வைத்த அதிமுக மாநாடு. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 15 லட்சம் பேர்கலந்துக்கொண்ட மதுரை மாநாட்டை அதிமுக நடத்தியது. எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மதுரை மாநாட்டை நடத்திய அதிமுக என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் வர்தா உள்ளிட்ட பல புயல்கள் வந்த போதும் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை கடந்த செப்டம்பர் மாதமே தெரியப்படுத்திவிட்டோம். கூட்டணி தர்மத்துக்காக மக்கள் விரோத செயல்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது என கூறினார்.
அதிமுக ஜெட் வேகத்தில் செல்லும்… எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. – இபிஎஸ்.!
பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியதும் அரங்கில் இருந்த தொண்டர்கள் ஆடிப்பாடி உற்சாகமடைந்தனர். மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் மத்திய அரசுகள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது. மாநிலத்தை யார் ஆட்சி செய்தாலும் மத்திய அரசுகள் எப்போதும் தேவையான நிதியை வழங்கியதே கிடையாது எனவும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு மனிதாபிமானத்தோடு வழங்க வேண்டும்.
மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அடுத்து என்ன தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும். காத்து காழ்புணர்ச்சியால் அம்மா உணவகங்களை திமுக அரசு மூடி வருகிறது” என கூறினார்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…