பாஜக கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் முடிவு – எடப்பாடி பழனிசாமி!

Edappadi Palaniswami

அதிமுக – பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அதிமுக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. வரும் தேர்தல்களை எதிர்கொள்ள புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராகவும், முதல்வராகவும் ஏற்றுக்கொள்கின்ற கட்சிகள் கூட்டணி அமைக்க வரலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து இது பற்றி தான் வாய் திறக்கவில்லை என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில், அதற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன் என்று தெரிவித்தார்,

அதாவது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு தான். இது பொதுச்செயலாளரின் தனது தனிப்பட்ட முடிவு அல்ல என்று கூறி, அதிமுக – பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக மௌனம் கலைத்து பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர்? மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்