பாஜக – அதிமுக முறிவு என்னை ஆச்சரியப்படுத்தவில்லை – எம்.பி.சுப்ரியா சுலே

Supriyasule

திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். இன்று மாலை இந்த கூட்டம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எம்.பி.சுப்ரியா சுலே அளித்துள்ள பேட்டியில், மகளிர் உரிமை மாநாட்டிற்கு என்னை அழைத்த திமுக நண்பர்களுக்கு எனது நன்றிகள். சென்னை வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இது எப்போது நிறைவேற்றப்படும் என்ற தேதி குறித்த விவரங்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. இப்படி மோசமாக அரசியல் செய்வதை பார்த்து கவலையாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை மத்திய பாஜக அரசு மதிப்பதாக தெரியவில்லை.

மத்திய அரசுக்கு எதிராக பேசும் எதிர் கட்சி தலைவர்களை ஒடுக்க சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூர்க்கத்தனமாக பயன்படுத்தப்படுகின்றனர். அதிமுக பாஜக கூட்டணி முறிவு எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. பாஜக எந்த கட்சியுடனும் நல்லுறவு வைத்திருக்காது. அனைவரையும் உள்ளடக்கிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நாட்டை உயர்த்த வேண்டும் என்றால் அனைத்து மக்களும் சமமாக முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்