பாஜக, அதிமுக அரசு.., தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள் -வேல்முருகன்..!
அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
தி.மு.க- தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடந்தபின்னர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வரவேண்டும். தொடர்ந்து, பாஜக அரசும், அதிமுக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு மக்கள் விரோத திட்டங்களையும், மக்கள் விரோத சட்டங்களையும் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள். இதனால், அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும்.
பாஜக தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் அரசியல் அதிகாரத்தை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக ஸ்டாலினை முதல்வராக வரவேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்று எங்களுக்கு உரிய இடங்களை ஒதுக்குமாறு திமுக தொகுதி பங்கீடு குழுவிடம் தெரிவித்துள்ளேன். திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் மகிழ்ச்சி உடன் ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி 2 தொகுதிகள் கேட்கும் நிலையில் திமுக ஒரு தொகுதி ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.