பாஜக – அதிமுக கூட்டணி முறிவு! அதிமுக இன்றி கூட்டணி அமைக்க முடியுமா?… நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்!

NIRMALA SEETHARAMAN

தமிழ்நாட்டில் தொடர் மோதலுக்கு பிறகு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக சமீபத்தில் அறிவித்தது. இது தான் தற்போது வரை தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. இந்த கூட்டணி முறிவு அண்ணாமலை முன்னர் தலைவர்கள் குறித்து பேசியதே காரணமாக என அதிமுகவினர் கூறினர்.

இருப்பினும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு இரு கட்சிகளும் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இதில் குறிப்பாக, தமிழக பாஜக கூறுகையில், கூட்டணி முறிவால் எங்களு எந்த நஷ்டமும் இல்லை, எங்கள் மேலிடம் அறிவுரை கூறிய பின்னர் விளக்கமாக பதிலளிப்போம் என தெரிவித்தனர்.

ஆனால், அதிமுகவினர் மவுனம் காத்து வந்த நிலையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது என மற்ற கட்சிகள் விமர்சித்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாஜகவுடன் இனி கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை, வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம், மக்கள் நலனுக்காக குரல் எழுப்புவோம் என கேபி முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது பாஜகவுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

இந்த சூழலில், கூட்டணி முறிவுக்கு பிறகு மவுனமாக இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவின் அடுத்த திட்டம் குறித்து ஆலோசிக்க டெல்லி செல்ல உள்ளார் என கூறப்பட்டது. மேலும், தமிழக நிலவரம் குறித்த முதற்கட்ட அறிக்கையை பாஜக தேசிய தலைமையிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான முடிவு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜகவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்தார்.

தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கருத்துக்களை கேட்டபின் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவு பற்றியும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் அதிமுக இன்றி பாஜக கூட்டணி அமைக்க முடியுமா என்பது குறித்தும் அறிக்கையில் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தேசிய பாஜக மேலிட உத்தரவின்பேரில் தமிழக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்