BJP – ADMK : பாஜவுடன் கூட்டணி கிடையாது.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு.! 

BJP State President Annamalai - ADMK Ex Minister Jayakumar

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து மிக முக்கிய அறிவிப்பை தெரிவித்தார். நேற்று வரை தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்த முடிவானது தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் கூறுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து அண்ணா பற்றி, விமர்சிப்ப்பது, தங்கள் தோழமை கட்சியை விமர்சித்து தன்னை முன்னிலைப்படுத்துவதை செய்து வருகிறார். இனி அவர் அப்படி பேசினால் அண்ணாமலையை பற்றி தாறுமாறாக அதிமுகவினர் விமர்சிப்பார்கள். அவர் ஒரு கருத்து கூறினால், இங்கு ஓராயிரம் கருத்துக்கள் வரும்.

ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை இப்படி செய்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருக்க தான் பாஜகவினர் விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையில் இருந்துகொண்டு எங்களையே அண்ணாமலை விமர்சிக்கிறார்.

அதிமுக இல்லாமல் பாஜக இங்கே (தமிழகத்தில்) கால் ஊன்ற முடியாது. எங்களை வைத்து தான் உங்களுக்கு (பாஜக) அடையாளம். எங்கள் தலைமையில் கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி செய்ய கூடாது. ஆதலால், இப்போதைக்கு அதிமுக – பாஜக கூட்டணி கிடையாது. தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்கிறோம்.

இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால் கடுமையான விமர்சனங்கள் வரும். அவர் எப்போதும் அவர் புகழ் பாடுவது மட்டுமே வேலையாக வைத்து கொண்டுள்ளார். இது என் கட்சியின் முடிவு. எனது தனிப்பட்ட கருத்து கிடையாது.

அண்ணாவை, பெரியாரை, எங்கள் தலைவரை விமர்சிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. இதனை டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களிடம் போய் சொல்லியும் அண்ணாமலை கேட்கவில்லை. இங்கு மாநில தலைமை முறையாக இல்லாத போது பாஜக தொண்டர்கள் உடன் ஒற்றுமையாக வேலை செய்ய முடியாது. பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகன் , தமிழசை தலைவராக இருந்த போது இல்லாத பிரச்னை இப்போது . அண்ணாமலை வந்தவுடன் வருகிறது. 4 பேர் வாழ்க என கோஷம் போட்டவுடன் அவருக்கு தலைக்கனம் உண்டாகிவிட்டது என அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்