பிஸ்கட், மிச்சர் மாநாட்டிற்குத் தயாராகும் ஸ்நாக்ஸ்! விஜய் போட்ட உத்தரவு!
த.வெ.க. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை பேக் செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு வாகனம் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும், அவர்கள் அமர நாற்காலிகள் போடும் ஏற்பாடுகள் மற்றும் குடிக்க குடிநீர் வசதிகள் என முக்கியமான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, மாநாட்டு திடலில் பொதுமக்கள் அமர 50,000 இருக்கைகள் உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் வெளியே நின்று காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் ஒவ்வொரு அரங்கிலும் 2 குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளது. தொண்டர்களின் வசதிக்கு ஏற்றார் போல், திடலை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஆங்காங்கே குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டிருக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்களுக்கு இடையில் பசித்தது என்றால் அவர்கள் சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள் வழங்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. பிஸ்கட், மிக்சர், தண்ணீர் பாட்டில் ஆகியவை ஒன்றாக வைத்து கவர் பேக் செய்யும் வேலைகளிலும் த.வெ.க தொண்டர்கள் மும்மரமாக ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். இதற்காக மதுரையில் 8 லட்சத்திற்கும் அதிகமாக தின்பண்டங்கள் பேக் செய்யப்பட்டு விழுப்புரத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படாமல் கேட்கும் பொது மக்களுக்கும் கொடுக்கவும் விஜய் உத்தரவு போட்டுள்ளதாகவும் த.வெ.க தொண்டர் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். மதுரையில் இருந்து பேசிய அவர் ” எங்களுடைய மூலமாக தான் இது விநியோகம் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது. மொத்தமாக 8 லட்சத்திற்கும் அதிகமான பண்டங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது போக இன்னும் வேண்டும் என்றால் விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டுக்கு வருபவர்களுக்கு மட்டுமில்லை. இதனை கேட்கும் பொது மக்களுக்கும் வழங்குங்கள் என தலைவர் விஜய் உத்தரவு போட்டதாகவும் அவர் தெரிவித்தார்.