நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Gnanasekaran

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, ஞானசேகரனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது. விசாரணையின் போது ஏற்கனவே, திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்து இருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது 7 திருட்டு வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 முதல் 2024 வரை, சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வில்லா டைப் வீடுகளை குறிவைத்து  7 வீடுகளில் 200 பவுன் நகைகளை காரில் சென்று கொள்ளையடித்ததாக அவர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருடிய அந்த நகைகளை விற்றவுடன் அதிகமான பணம் கிடைத்த காரணத்தால் அந்த காசை வைத்து சொகுசு கார் ஒன்றையும் தான் வாங்கியகாகவும் மீதி பணத்தை வைத்து பிரியாணி கடை வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, அதன் அடிப்படையிலும் அவரை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வேறு எதுவும் சம்பவங்களில் அவர் ஈடுபாட்டாரா? என்கிற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்