உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு திருச்சியில் 10 பைசாவிற்கு பிரியாணி என அறிவித்த உணவகம் முன்பு குவிந்த பொதுமக்கள், பிரியாணி தீர்ந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
என்னதான் பிட்சா, பர்கர் என அந்நிய உணவுகளை மக்கள் விரும்பினாலும், அனைவரின் மனதின் ஆழத்தில் பதிந்த ஒரே உணவு, பிரியாணி. அந்தவகையில், உலகளவில் இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது.
இதனைமுன்னிட்டு பல பிரியாணி கடைகளில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் 10 பைசாக்கு பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைதொடர்ந்து பிரியாணி வாங்குவதற்கு மக்கள் பலரும் 10 பைசா நாணயத்துடன் அந்த கடைக்குமுன் திரண்டனர்.
பிரியாணியை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காலை முதல் மக்கள் காத்திருந்தனர். மேலும், பிரியாணி என்றவுடன் அந்த கடைமுன் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்காத காரணத்தினால், அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த கடையில் காலை 10 மணி முதல் 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் அங்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த மக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…