நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைத்திட… முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தலைவர் பிறந்தநாள் வாழ்த்து.!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை திமுக தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அதே போல, தமிழக முதல்வர் பிறந்தநாளுக்கு தேசிய கட்சி, மாநில கட்சிகள் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனவும் , நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் அவருக்கு கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றவும் தான் வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.