உலகுக்கோர் சித்தாந்தத்தைக் கிழக்கிலிருந்து ஒளிபோல் வழங்கிய கிழவர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட்.
தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுபோன்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், உலகுக்கோர் சித்தாந்தத்தைக் கிழக்கிலிருந்து ஒளிபோல் வழங்கிய கிழவர். அத்தனை வன்முறைகளும் அஞ்சும் அகிம்சையை அறிவித்த ஆற்றலாளர் காந்திக்கு இன்று பிறந்தநாள். ஒரு சகாப்தம் ஜனித்த நாள் துன்று பதிவிட்டுள்ளார்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…