ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை- பாஜக எம்எல்ஏ
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை பாஜக எம்எல்ஏ குற்றசாட்டு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த தேர்தலில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ குற்றசாட்டு
அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கில் யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் வாங்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.