கொரோனா தடுப்பூசி கிடங்கை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி சேமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்துகளை வட்டார அளவில் கொண்டு செல்வதற்கு 2,850 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஹோட்டல் ஊழியர்கள் எட்டாயிரத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்ததில் 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு ஐந்து மடங்கு குறைவு. கேரளாவில் பரவக்கூடிய பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 2,156 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் 24 பேருக்கு குழு உறுதி செய்யப்பட்டது. மேலும் 32 பேரின் சளி மாதிரி முடிவுகள் வர வேண்டி உள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்த மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் இதுவரை 4 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…