பாடப்புத்தகத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு…! – ஐ.லியோனி
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனியை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று பொறுப்பேற்றார். அப்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கீழே வைத்த பாடப்புத்தகத்தை 10 ஆண்டுகளுக்குப்பின் 2021ல் மீண்டும் கையிலெடுத்து உள்ளேன். பாடநூல்களை மாணவர்கள் விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வண்ணம் மாற்றுவதே தனது நோக்கம் என்றும், தான் மாணவராக இருந்த காலகட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்ததாக குறிப்பிட்டார்.
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது தொடர்பாக முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.