அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு வைத்த அடுத்த செக்…. கடிவாலம் கொண்டு கட்டுப்படுத்தும் கல்வித்துறை….கல்வி கற்பித்தல் சிறப்படையுமா?….

Default Image

அரசு பள்ளிகள் என்றாலே அச்சம் ஏற்படும் அளவிற்கு இன்றைய சமுதாயம் தள்ளப்பட்டு இருக்கிறது.தமிழகத்தில் உள்ள  அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணமாக  சமூக மற்றும்  பொருளாதார சூழ்நிலைகள்   ஒரு தடை என்னவென்றால், ஆசிரியர்களின் உள்ளார்ந்த அர்ப்பணிப்பு முழுமையாக இல்லாததும்,பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமையும்  ஒரு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Image result for அரசு பள்ளி ஆசிரியர்கள்

மேலும் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதும்,அப்படி  வந்துவிட்டு வருகை பதிவேட்டில் பொய்யாக கையெழுத்திட்டுச் செல்வதும், சைடு பிசினஸ் போன்றவற்றில் பலர் ஈடுபடுவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.அதிலும்  குறிப்பாக  ஆசிரியர்கள் பள்ளி துவக்க நேரத்தில் வந்து பள்ளி நேரம் முடியும் வரை பணியாற்றினாலே ஓரளவிற்கு மாணவ, மாணவிகளை கண்காணித்து 100 சதவீத தேர்ச்சிக்கு வழிவகுக்க முடியும், என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.எனவே அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் விதமாக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.

Image result for அரசு பள்ளி ஆசிரியர்கள்

இதை  முன்னிட்டு பயோ மெட்ரிக் இயந்திரத்தை கையாளும் முறை, அதில் வருகையை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சிகள் ஏற்கனவே  தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு  அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  பள்ளிக்கும் தலா 2 பயோ மெட்ரிக் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் சரியான நேரம் முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கப்படும். தினசரி காலை 10 மணிக்கு எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் தாமதமாக வந்துள்ளனர்.

Related image

வராதவர்கள் முறைப்படி விடுமுறை  அனுமதி பெற்றுள்ளார்களா போன்ற விவரங்கள் கண்காணிக்கப்படும். மாதத்தில் 3 நாட்களுக்கு மேல் தாமதமாக வந்தால் ஆப்சென்ட் போடப்படும் என கல்வித்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளார்.சம்பள உயர்வுக்காக கொடி பிடிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் புனிதமான,தியாகத்தனமான,உளப்பூர்வமான ஆசிரியர்களுக்கு தகுந்த கடிவாலமாக பொதுமக்கள் இந்த அரசின் புதிய நடவடிக்கையை கருதுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்