“மத்திய அரசு நாளை அறிமுகப்படுத்தவுள்ள மசோதா;ஜனநாயகத்துக்கு ஆபத்தானது” – எம்.பி.ரவிக்குமார்!

Published by
Edison

நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகப்படுத்தப்படவிருக்கிற ‘தேர்தல் சட்டம் (திருத்தம்) மசோதா 2021’ ஆனது தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசு நாளை (20.12.2021) அறிமுகப்படுத்தவுள்ள தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021-க்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளதாகவும்,இந்த மசோதா தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று விழுப்புரத்தை சேர்ந்த விசிக எம்பி ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

“இந்திய ஒன்றிய அரசு நாளை (20.12.2021) அறிமுகப்படுத்தவுள்ள தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா 2021 க்கு அறிமுக நிலையில் எனது எதிர்ப்பைத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளேன். அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன்:

“ இந்த மசோதா தேர்தல் சட்டம் 1950 பிரிவு 23 இல் துணைப்பிரிவு 3 க்குப் பிறகு ஒரு உட்பிரிவை சேர்க்கிறது. அனைத்து வாக்காளர்களும் தமது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதை இப்பிரிவு கட்டாயமாக்குகிறது. இது புட்டசாமி வழக்கில் ‘ஆதார் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட நலத் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும்’ என இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதாரை இணைக்கும் எந்தவொரு முயற்சியும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மக்கள்தொகைத் தகவல்களை வாக்காளர் தரவுத்தளத்துடன் இணைக்க வழிவகுக்கும்.

இது ( சாதி, மத, இன) அடையாளங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குரிமையைப் பறிப்பதற்கும், தேர்தலின்போது இலக்கு வைத்து விளம்பரம் செய்வதற்கும்,தரவுகளின் அடிப்படையிலான வணிகச் சுரண்டலுக்குமான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

எனவே, இந்த மசோதாவை அறிமுகம் செய்யாமல் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும்,இந்த மசோதாவானது தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.அதை அறிமுகப்படுத்த வேண்டாம் என மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசை வலியுறுத்தவேண்டும்”,என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Recent Posts

சுடச்சுட ரெடியாகும் ‘குட் பேட் அக்லி’… வெளிவந்தது அசத்தலான அப்டேட்!

சுடச்சுட ரெடியாகும் ‘குட் பேட் அக்லி’… வெளிவந்தது அசத்தலான அப்டேட்!

சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…

2 minutes ago

முன்னிலையில் பாஜக! பின்தொடரும் காங்கிரஸ்! தேர்தல் நிலவரம் இதோ…

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

17 minutes ago

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு கணிப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

32 minutes ago

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி பேச்சு!

மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…

1 hour ago

வயநாட்டில் முன்னிலை பெரும் பிரியங்கா காந்தி!

வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…

1 hour ago

Live :- மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை ..!

சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

1 hour ago