முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறும் போது அதிமுக அரசு மசோதாக்கு எதிராக வாக்களிக்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் தான் மசோதா நிறைவேறியுள்ளது என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் கடந்த 25 ம் தேதி முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், இன்று மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக இன்று மாநிலங்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியது. இதே போல, பகுஜன் சமாஜ்வாதி கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் விழுந்தன. பெரும்பான்மையிலான வாக்குகள் அடிப்படையில் மசோதா நிறைவேறியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மக்களவை துணை தலைவர் கனிமொழி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யாமல் அவையில் இருந்து மசோதாவுக்கு எதிராக வாக்கு அளித்து இருந்தால் இந்த மசோதா நிச்சயம் நிறைவேறி இருக்காது என்றும் அதிமுக இப்போதும் மசோதாவுக்கு ஆதரவாக தான் செயல்பட்டு இருப்பதாக குற்றம் சட்டை இருக்கிறார்.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…