#BiharElection : பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
பீகாரில் சட்டபேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் நிதிஷ்குமாருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக சார்பில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகாரின் இளம் தலைவராக உருவெடுத்து, மாக்களின் ஆதரவோடு உயர்ந்துவரும் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த தேர்தலில் அதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ள தனி பெரும் கட்சியாக பீகாரில் வெற்றி பெற்றிருப்பது, அந்த மாநிலத்தின் உயிரோட்டத்தையும், துடிப்பான ஊக்கத்தையும் அளித்திடக் கூடியது என தெரிவித்துள்ளார்.