"கைதி" மற்றும் "பிகில்" படத்திற்கு எத்தனை திரையரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது..!

Default Image

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “கைதி” படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது கைதி படத்தின் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பிகில்” படமும் தீபாவளி அன்று தான் திரைக்கு வருகிறது. இத்துடன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்கு கிடைக்காது என்பதால் சங்கத்தமிழன் விலகியது. தற்போது பிகில் படத்திற்கும் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி அன்று “கைதி” மற்றும் “பிகில்” படத்திற்கு எத்தனை திரையரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில், பிகில் படத்திற்கு 700 திரையரங்குகளும் கைதி படத்திற்கு 300 திரையரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வைரலாக பேசப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
jasprit bumrah vs virat kohli
petrol diesel modi
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan