"பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி"- அமைச்சர் ஜெயக்குமார்..!

Default Image

இன்று சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , சிறப்பு காட்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதால்தான் அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருந்தால்அரசு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கொடுத்திருக்கும். “பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி” சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இதை பொதுமக்களின் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது என ஜெயக்குமார் கூறினார்.
இந்நிலையில் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்